அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு: குலாம் நபி ஆசாத் வரவேற்பு

அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் தேர்தல் ஒத்திவைப்பு: குலாம் நபி ஆசாத் வரவேற்பு
Updated on
1 min read

ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் (டிபிஏபி) தலைவர் குலாம் நபி ஆசாத் நேற்று கூறியதாவது: அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு அரசியல் கட்சிகளுக்கு நிம்மதி அளித்துள்ளது.

இதனால் அவற்றுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த சரியான முடிவை எடுத்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு காரணமாக முகலாய சாலை மூடப்பட்டுள்ளது.

பூஞ்ச் மற்றும் ரஜோரியை ஸ்ரீநகருடன் இணைக்கும் இந்த சாலை ஷோபியான் - பூஞ்ச் இடையிலான பயண தூரத்தை 588 கி.மீ. வரை குறைக்கிறது. எனவே இந்த பாதை மூடப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கான தேர்
தலை தேர்தல் ஆணையம் மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in