

புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இத்தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் தனித்துப் போட்டியிடுகிறது.
முதல்வர் நவீன் பட்நாயக், சட்டப்பேரவை தேர்தலில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சியில் போட்டியிடுவது வழக்கம். இத்தொகுதியில் நவீன் பட்நாயக் கடந்த செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இரண்டாவதாக போலங்கிர் மாவட்டத்தில் உள்ள கன்டாபஞ்சி தொகுதிக்கு அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முதல்வரின் பள்ளித் தோழர் ஏ.யு.சிங்தியோ, கட்சியின் மூத்த தலைவர் வி.கே.பாண்டியன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
முன்னதாக துஷ்ராவில் இருந்து டிட்லகரில் துணை ஆட்சியர் அலுவலகம் வரை நவீன் பட்நாயக் ஊர்வலமாக சென்றார்.