கடற்படை துணைத் தளபதியாக சுவாமிநாதன் பதவியேற்பு

படம்: எக்ஸ்
படம்: எக்ஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி நேற்று முன்தினம் கடற்படை தளபதியாக பொறுப்பேற்றதையடுத்து, அவர் வகித்த துணை தளபதி பொறுப்புக்கு வைஸ் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் அவர் போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். இதற்கு முன் அவர் கடற்படை தலைமையகத்தில் பணியாளர் பிரிவுக்கு தலைமை தாங்கினார். ஐஎன்எஸ் வித்யுத், வினாஷ், குலிஷ், மைசூர், விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

கடந்த 1987-ம் ஆண்டு கடற்படையில் சேர்ந்த சுவாமிநாதன், தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் போர் முறையில் நிபுணத்துவம் பெற்றவர். தேசிய பாதுகாப்பு அகாடமி, அமெரிக்காவின் கடற்படை போர் கல்லூரி உட்பட பல பிரிவுகளில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். கடற்படையில் இவர் ஆற்றிய சேவைக்காக அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in