

மகாராஷ்டிரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரும் தண்ட னையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதி மன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களை திருட்டு கும்பலில் இணைத்து வந்த ரேணுகா ஷிண்டே (45), சீமா காவித் (39) என்ற இந்த இருவரும், 13 குழந்தைகளை கடத்தியதும், அதில் 5 குழந்தைகளை கொலை செய்ததும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 2006-ம் ஆண் டில் உச்ச நீதிமன்றமும் அவர் களது தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து இரு வரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.
கடந்த மாதம் இவர்களின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இதை யடுத்து அவர்களுக்கு தூக்கு தண்டனை விரைவில் நிறை வேற்றப்பட வாய்ப்பு இருந்தது.
அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் தூக்கு தண்டனை பெரும் முதல் பெண்களாக அவர்கள் இருப்பார்கள். இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சகோதரிகள் இருவர் சார்பிலும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் கால தாமதமாகிவிட்டதை சுட்டிக் காட்டி தங்கள் மரண தண்ட னையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென்று அவர்கள் கோரியுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிர வாதி அப்சல் குருவுக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுவே இந்தியாவில் நிறைவேற்றப் பட்ட கடைசி மரண தண்டனை யாகும்.