அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் சற்றே நிலை தடுமாறியதால் பதற்றம்

அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர் சற்றே நிலை தடுமாறியதால் பதற்றம்
Updated on
1 min read

பெகுசராய்: பிஹாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நேரிடவில்லை.

பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது பாஜக. மொத்தம் உளள தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும், 16 இடங்களில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியும் மற்ற இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹாரின் பெகுசராய் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.

இதன்பின் ஹெலிகாப்டர் மூலமாக அடுத்த பிரச்சாரத்துக்கு செல்லவிருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டார். ஆனால், ஹெலிகாப்டர் புறப்படும் முன் கட்டுப்பாட்டை இழந்து சற்றே நிலை தடுமாறியது. ஒரு கட்டத்தில் மேலே பறக்க முடியாமல், கீழே தரையை தொடும் அளவுக்கு சென்றதால் பதற்றம் நிலவியது. எனினும் சில விநாடிகளில் மீண்டும் வானத்தை நோக்கி பறந்து நல்வாய்ப்பாக விபத்தில் இருந்து தப்பியது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்து அமித் ஷா உள்ளிட்டோர் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in