கிழக்கு, தென் மாநிலங்களில் வரும் புதன் வரை வெப்ப அலை: வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

கிழக்கு, தென் மாநிலங்களில் வரும் புதன் வரை வெப்ப அலை: வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: வெப்ப அலை வீசுவது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் தமிழகம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிஹார், உத்தர பிரதேசம் மற்றும்மகாராஷ்டிராவில் பகல் நேரங்களில் வெப்பநிலை 41 டிகிரி முதல்45 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது.

ஒடிசாவின் அங்குல்நகரில் 44.7 டிகிரி செல்சியஸ்,தலைநகர் புவனேஸ்வரில்44.6 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலைபதிவாகியுள்ளது. இந்த கடும்வெப்ப அலை வரும் புதன்கிழமைவரை தொடரும். இதனால் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணிவரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம்.

மும்பையிலும் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வடக்கு கடலோர பகுதிகளில் நிலவும் வெப்ப அலை மும்பை வரை தொடரும். கேரளாவின் கொல்லம், திருச்சூர் ஆகியபகுதிகளிலும் வெப்ப அலை வீசும். இதன் பாதிப்பில் இருந்துதப்பிக்க பகலில் வெளியே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

கனமழை: மேற்கு இமயமலைப் பகுதியில் இன்று இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபோல் வடகிழக்கு பகுதியிலும் நாளை வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம். இவ்வாறு இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in