

மும்பை: இண்டியா கூட்டணி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர் நாட்டைஆட்சி செய்தால்கூட பரவாயில்லை. ஆனால், இந்த நாடு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கிவிடக்கூடாது என்பதே முக்கியம் என பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு சிவசேனா (உத்தவ்பாலசாஹிப் தாக்கரே) எம்பி சஞ்சய் ராவத் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் மேலும் கூறியதாவது: ஆண்டுக்கொரு பிரதமர் என்றசூத்திரத்தை பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். அதன்படி இண்டியா கூட்டணி வெற்றிபெற்றால் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இண்டியா கூட்டணி வெற்றிபெற்றால் பிரதமரை தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. ஒரு வருடத்தில் இரண்டு அல்லது நான்குபிரதமர்களைக் கூட இண்டியாகூட்டணி சார்பில் உருவாக்குவோம். அது எங்கள் கூட்டணிக்கு உள்ள உரிமை. ஆனால், நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி செல்ல விடமாட்டோம்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி மிகச் சிறந்தது.யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.
இதுவரை நடைபெற்ற இரண்டு கட்ட மக்களவை தேர்தலிலும் என்டிஏ கூட்டணி தோல்வியை நோக்கி செல்வதை பாஜகவினர் உணர்ந்து விட்டனர். ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது இண்டியா கூட்டணி 300 இடங்களை தாண்டிவிட்டதை அவர்கள்அறிவார்கள். இவ்வாறு சஞ்சய்ராவத் தெரிவித்துள்ளார்.
உலகம் நம்மை கேலி செய்யும்: சமீபத்தில் நடைபெற்ற பேரணி யில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றால் ஆண்டுக்கொரு பிரதமரை தேர்வு செய்யும் சூத்திரத்தை இண்டியா கூட்டணி தேர்ந்தெடுக்கும். அப்படி பார்த்தால் 5 ஆண்டு ஆட்சியில் 5பிரதமர்கள் வருவார்கள். அத்தகைய ஏற்பாடுகளை மக்கள் ஏற்பார்களா? நாட்டில் அப்படி ஒருநிலைமையை உருவாக்க முடியுமா? அப்படி ஒரு நிலை உருவானால் உலகம் நம்மை கேலி செய்யும் என்பதே உண்மை. உலகளவில் இந்தியாவுக்கு தற்போது கிடைத்துவரும் நற்பெயரை அது கெடுத்துவிடும்’’ என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக் கும் விதமாக சஞ்சய் ராவத் இவ்வாறு கூறியுள்ளார்.