ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா @ தேர்தல் பிரச்சார பயணம்

ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா @ தேர்தல் பிரச்சார பயணம்
Updated on
1 min read

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல ஹெலிகாப்டரில் ஏறும்போது நிலை தடுமாறி விழுந்தார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

நேற்று மதியம் அசான்சோல் தொகுதியில் பிரச்சாரத்துக்கு செல்வதற்காக துர்காபூர் பகுதியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மம்தா பானர்ஜி கிளம்பினார். ஹெலிகாப்டரில் ஏறி இருக்கையில் அமர முயன்றபோது, திடீரென நிலை தடுமாறி ஹெலிகாப்டருக்கு உள்ளேயே தவறி விழுந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் உதவிக்கு வந்தனர்.

அதன் பிறகு பயணத்தை ரத்து செய்யாமல் ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்றார். இந்தச் சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மம்தா பானர்ஜி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பியது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in