மணிப்பூரில் வன்முறை: 2 வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் நரண்சீனா கிராமத்தில் ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பி) முகாம் உள்ளது. இதன் அருகே மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் வீரர் களுக்கான முகாம் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மலையிலிருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். சிலர் முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இந்த தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்” என்றார். இதனிடையே, இம்பால் கிழக்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்தார்.

மணிப்பூரில் மைதேயி, குகி சமுதாயத்தினர் இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலை சீர்குலைக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in