

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், பிஹார் ஆகிய மாநிலங் களின் வெவ்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
மழை, வெள்ளத்தால் இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந் தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மழை, வெள்ளத் தால் காயமடைந்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டோ ருக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப் படுகிறது. இதில் உத்தரப் பிரதேசத் தில் மட்டும் 89 பேர் உயிரிழந் துள்ளனர்.
உத்தரப் பிரதேசம், பிஹாரில் ஆறுகளில் அபாயக் கட்டத்தை யொட்டி நீர் பெருக்கெடுத்து ஓடு கிறது. பிஹாரின் காக்ரா நதியில் நீர் வேகமாக அதிகரித்து வருவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்.
பிஹார் மாநிலத்தின் சில இடங் களில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
அசாமில் ஹிமாஜி, லக்கிம்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி யுள்ளன. அருகில் உள்ள அருணா சலப் பிரதேசத்தையும் ஆற்று வெள்ளம் விட்டு வைக்கவில்லை. கரையோர பகுதிகள் பல ஆற்றுக்குள் மூழ்கிவிட்டன.
அங்கு இதுவரை 3 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வெள்ளத்தால் வீடுகளை இழந்த மக்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பிரம்மபுத்திரா நதியில் அபாய கட்டத்தை தாண்டி நீர் செல்கிறது. அசாமில் மழை, வெள்ளத்தால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.