4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்

4 நாட்களுக்கு கடும் அனல் காற்று வீசும்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை காலத்தையொட்டி மேற்கு வங்கம், ஒடிசாவின் சிலபகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கூடுதலாக பிஹார், ஜார்க்கண்ட், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகாவில் உட்புற மாவட்டங்கள், தமிழ்நாடு, கிழக்கு உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும். கேரளா, மாஹே ஆகிய பகுதிகளில் 28-ம் தேதி வரையிலும், கொங்கன் பகுதியில் 29-ம் தேதி வரையிலும், உத்தர பிரதேசம், ஆந்திர மாநிலம் கடலோரப்பகுதிகள் மற்றும் ஏனாம் பகுதியில் வரும் 30-ம் தேதி வரை யிலும் வெயில் வாட்டி வதைக்கும், வெப்ப அலை வீசும்.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in