

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள தார்வாட் தொகுதியில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி போட்டியிடுகிறார். அவர் லிங்காயத்து வகுப்பினருக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டி, லிங்காயத்து மடாதிபதி ஃபக்கீரா திங்களேஸ்வர் சுவாமி சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதயைடுத்து முன்னாள் முதல்வரும் பாஜகமூத்த தலைவருமான எடியூரப்பா, திங்களேஸ்வர் சுவாமியிடம் பிரஹலாத் ஜோஷிக்கு எதிராக போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து மடாதிபதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இதனால் பிரஹலாத் ஜோஷியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.