கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு ஒபிசி ஒதுக்கீடு வழங்கியது சமூக நீதிக்கு எதிரானது: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்ப்பு

கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு ஒபிசி ஒதுக்கீடு வழங்கியது சமூக நீதிக்கு எதிரானது: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் எதிர்ப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கடந்த 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட‌ மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 12.92% முஸ்லிம் மக்கள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க1994-ல் ஒபிசி பிரிவில் பட்டியல் 1-ன்கீழ் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு ஒபிசி பிரிவில் பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2ஏ ஆகியவற்றில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது.

கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''முஸ்லிம்களில் உள்ள அனைத்து சாதியினரையும் பின்தங்கிய வகுப்பினராக கருத முடியாது.

அனைவரையும் பின்தங்கியவராக கருதி, ஒபிசி பிரிவில்சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது. முஸ்லிம் மதம் சாதி அமைப்பை ஏற்கவில்லை. ஆனாலும் அந்தமதத்திலும் பின்தங்கிய மற்றும்ஒடுக்கப்பட்ட சாதிகள் இருக்கின்றன. முஸ்லிம் மதம் முற்றிலும் சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவில்லை.

ஆனால் இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சாதியினரையும், வேறொரு மதத்தை சேர்ந்த அனைத்து சாதிகளையும் ஒரே சமமாக கருத முடியாது. அவ்வாறு செய்தால் அது பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் உரிமைகளைப் பறிப்பதாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in