

கேரளத்தில் மதுபான பார்களை மூடிவிட்டு, திடீரென கூடுதலாக ஏராள மான கள்ளுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் தொடு புழா, மறையூர், உடும்பன் சோலை, நெடுங்கண்டம், மூணாறு, வாகமன் ஆகியவை முக்கிய நகரங்கள். இதில் மூணாறு, தேக்கடி, வாகமன் ஆகியவை சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
கேரள மாநிலத்தில் மது அருந் துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால், விரைவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3 நாள்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் செயல்பட்டு வந்த 312 மதுக்கடை ‘பார்’களை மூட அரசு உத்தரவிட்டது.
மேலும், ஐந்து நட்சத்திர அந்தஸ்து உடைய ஹோட்டல்களில் மட்டுமே ‘பார்’ நடத்த அனுமதிக்கப்படும் எனக் கூறியது. இதற்கு ஆதரவும், எதிர்ப் பும் கிளம்பி உள்ளது.
இதற்கிடையில், இடுக்கி மாவட்டம் முழுவதும் 60-க்கும் மேற் பட்ட 2, 3 நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டல்களில் இயங்கிவந்த 26 ‘பார்’கள் அனைத்தும் இன்று முதல் மூடப்படுகின்றன.
சின்னகானலில் உள்ள ஒரே ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ‘பார்’ மட்டும் இனி இடுக்கி மாவட்டத்தில் செயல்பட உள்ளது.
கேரள அரசின் இந்த திடீர் உத்தர வுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் மது அருந்துவோரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, ‘பார்’கள்தான் மூடப்படும், ஆனால் மதுக்கடைகள் திறந்திருக்கும் என உயர் அதிகாரிகள் விளக்கமளித் தனர். இதை பலர் ஏற்றுக் கொள்ள வில்லை.
இந்நிலையில், கேரள அரசு திடீரென இடுக்கி மாவட்டத்தில் புதிதாக 202 கள்ளுக் கடைகளை திறக்க அனுமதி அளித்து சனிக் கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் இடுக்கி மாவட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: இடுக்கி மாவட்டத்தில் செயல் பட்டு வந்த ‘பார்’கள் மூடப்பட உள்ளன.
‘பார்’ அனுமதி கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. ஏற்கெனவே 42 கள்ளுக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 202 கள்ளுக் கடைகள் செயல்பட உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.