கனமழை எதிரொலி | துபாய் செல்லும் பயணிகளுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்
Updated on
1 min read

துபாய்: ஐக்கிய அரசு அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால், அவசியற்ற துபாய் பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு இந்தியப் பயணிகளை இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய பயணிகளுக்கு புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், "ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்பாராத விதமாக பெய்த கன மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் உள்வரும் விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக மட்டுப்படுத்தி உள்ளது.

நிலைமையை சரி செய்து மீண்டும் பழையபடி சேவையை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீகரக அதிகாரிகள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், விமானம் புறப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களிடமிருந்து இறுதி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விமான நிலையத்திற்கு செல்லுமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த பின்னணியில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிக்கும் அல்லது அதன் வழியாக பயணிக்கும் இந்திய பயணிகள், துபாய் விமான நிலையம் இயல்பு நிலைக்கு வரும் வரை அத்தியாவசியமற்ற பயணத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய குடிமக்களுக்கு உதவ, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஏப்ரல் 17 முதல் செயல்படும் அவசர உதவி எண்களை அறிவுத்துள்ளது. அதன்படி, +971501205172
+971569950590
+971507347676
+971585754213

என்ற எண்களை உதவிக்காக தொடர்புகொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in