ஜாமீன் பெறுவதற்காகவே இனிப்பு சாப்பிடும் கேஜ்ரிவால்: அமலாக்கத் துறை தகவல்

கேஜ்ரிவால்
கேஜ்ரிவால்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மதுக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை (ஈ.டி.) வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈ.டி. அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்படி இருந்தும் அதிக சர்க்கரை உள்ள உணவுகளை அவர் உட்கொள்கிறார். அவர் தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்கிறார். மருத்துவ அறிக்கையை காரணம் காட்டி ஜாமீன் பெறுவதற்காக அவர் இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்” என்றனர்.

உணவு அட்டவணை: இதையடுத்து நீதிபதி கூறும்போது, "இந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில், கேஜ்ரிவாலின் உணவு அட்டவணையும் இடம்பெற வேண்டும்" என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in