முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2004-ம் ஆண்டில் 417 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலில் 330 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட வாய்ப்புள்ளது.

இதற்கு, இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்து காங்கிரஸ் கட்சி விலகி நிற்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களை குறைத்துக் கொண்டுள்ளது. 2024 நிலைமை 2004-ல் இருந்த நிலைமையைப் போலவே உள்ளது.

எனவே, இந்த தேர்தலில் காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சிகளும் தெளிவான தீர்ப்பை பெறும். எனவே, எங்களுக்கு எந்த புதிய கட்சிகளின் ஆதரவும் தேவையில்லை’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in