Published : 18 Apr 2024 04:51 AM
Last Updated : 18 Apr 2024 04:51 AM

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதியில் போட்டி

நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் வரும் மே 13-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஆளும் பிஜு ஜனதா தள தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 5-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். 9 பேர் கொண்ட இந்த பட்டியலில் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இப்போது எம்எல்ஏ-வாக உள்ள 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேறு கட்சியிலிருந்து வந்த 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 147 தொகுதிகள் உள்ள நிலையில் இதுவரை 126 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நவீன் பட்நாயக், வரும் தேர்தலில் பாரம்பரியமாக போட்டியிடும் ஹிஞ்சிலி (கஞ்சம் மாவட்டம்) மற்றும் போலாங்கிர் மாவட்டம் கந்தபஞ்சி என 2 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹிஞ்சிலி மற்றும் பிஜப்பூர் (பர்கார் மாவட்டம்) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், பிஜப்பூர் தொகுதியில் ராஜினாமா செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x