அமெரிக்காவில் மர்மமாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவர் உடல் தாயகம் வந்தது

அமெரிக்காவில் மர்மமாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மாணவர் உடல் தாயகம் வந்தது

Published on

ஹைதராபாத்: ஹைதராபாத் நாச்சாரம் அம்பேத்கர் நகரை சேர்ந்த முகமது சலீம் மகன் அப்துல் முகமது அராபத்.

இவர் ஐடி பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு, மேற்கல்விக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஓஹியோ மாகாணம், கிளீவ்லாந்து பல்கலைக்கழகத்தில் இவர் மேற்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த வாரம், அமெரிக்கா-கனடா எல்லையில் உள்ள ஏரிக்கரையில் மாணவர் அப்துல் முகமது அராபத்தின் உடல் மீட்கப்பட்டதாக கிளீவ்லாந்து போலீஸார் ஹைதராபாத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை சலீம் கூறியிருந்தார். இந்நிலையில், அராபத்தின் உடல் நேற்று ஹைதராபாத் வந்தது. உடலை பார்த்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in