பெண் ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் மகன் குதித்து விளையாடும் காணொலியால் சர்ச்சை

பமேளா சத்பதி  ஐஏஎஸ் அலுவலக மேஜையில் விளையாடும் மகன்.
பமேளா சத்பதி ஐஏஎஸ் அலுவலக மேஜையில் விளையாடும் மகன்.
Updated on
1 min read

புதுடெல்லி: பமேளா சத்பதி என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த வியாழன்று காணொலியுடன் கூடிய ஒரு எக்ஸ் பதிவு வெளியிட்டார். அந்த காணொலியில் அவரது மகன் ஐஏஎஸ் அதிகாரியின் அலுவலக அறை மேஜை மீது ஏறிக் குதித்துக் கொண்டிருந்தான். சூப்பர்மேன் டீ ஷர்ட் அணிந்து காட்சியளித்த அந்த சிறுவன் சினிமா கதாநாயகர்களின் பிரபல வசனங்களைப் பேசியபடி விளையாடினான். அப்போது ஐஏஎஸ்அதிகாரி பமேளா சத்பதி தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

இந்த காணொலியுடன் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவு: இத்தனை ஆண்டுகள் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பருவகாலம், சிறுவனின் தாயாக ஆனப்பின்னர் உங்களை மிகவும் பயமுறுத்தக்கூடியதாக மாறிப்போகும். அதுதான் கோடை விடுமுறை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிவு கடந்த இரு தினங்களில் 3 லட்சத்து 70 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. 2000-த்துக்கும் அதிகமானோர் விருப்பக்குறி இட்டுள்ளனர். பதிவுக்கான பின்னூட்டத்தில், பணியையும் குழந்தை வளர்ப்பையும் சரிசமமாகச் சமாளிக்கிறார் என்று சிலர் பாராட்டியுள்ளனர். குழந்தைப் பருவம் திரும்பவாராது என்பதால் இதனைத் தவறவிடாமல் மகிழ்ந்திருங்கள் என்று கூடச் சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அதேநேரம், ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது அலுவலகத்தில் சிறுவனை ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது தலைகுனிவு என்றும், இதேபோன்று கீழ்நிலை பணிகளில் உள்ள ஊழியர்கள் அனுமதிக்கப்படுவார்களா? இதென்ன அரசு அலுவலகமா அல்லது நடன நிகழ்ச்சி மேடையா? என்பது போன்ற விமர்சனங்களும் எதிர்வினைகளும் கிளம்பியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in