

ஒடிஸா மாநிலத்தில் மகாநதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் கனமழையில் மகாநதி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. கனமழையால் உயிரிழந் தோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந் துள்ளது.
கனமழையால் 23 மாவட்டங்களைச் சேர்ந்த 1,553 கிராமங்களில் உள்ள 9.95 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறப்பு நிவாரண ஆணையர் பி.கே. மஹாபாத்ரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
மகாநதியில் சில இடங்களில் அபாய அளவை விட அதிகமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள போதும், பெரிய அளவில் சேதம் ஏற்படும் என அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், ஹிராகுட் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது.
முண்டுலி பகுதியில் மகாநதியில் நொடிக்கு 12 லட்சம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தற்போது, 11 லட்சம் கன அடியா கக் குறைந்துள்ளதால் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றார்.
‘‘மொத்தம் 630 அடி உயர கொள்ளவு கொண்ட ஹிராகுட் அணையின் நீர்மட்டம் 628.08 அடியாக நீடிக்கிறது. இதன் 64 மதகுகளில் 50 மதகுகளில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நதியில் வெள்ளத்தின் அளவு குறைந்து வருவதால், மூன்று மதகுகள் முதலில் அடைக்கப்படும். பிறகு சூழலை அவதானித்து மற்ற மதகுகள் அடைக்கப்படும். தற்போது, அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து நொடிக்கு 7.8 லட்சம் கன அடி நீர் வரத்து உள்ளது” என ஹிராகுட் அணையின் தலைமைப் பொறியாளர் பிஸ்வாஜித் மொஹந்தி தெரிவித்துள்ளார்.
உபநதிகளில் வெள்ளப்பெருக்கு
மகாநதியின் உபநதிகளிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுக்கிறது.
நாரஜ், ஜோப்ரா, தலேகாய் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள் ளது. கட்டாக், ஜகதீஷிங்பூர், கேந்ரபாரா, குர்தா, பூரி மாவட் டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ளன.
1.11 லட்சம் மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து பாதுகாப் பான இடங்களுக்கு வெளியேற்றப் பட்டுள்ளனர்.