பாதுகாப்பு செலவு ரூ.1.64 கோடி தர வேண்டும்: சமூக சேவகர் நவ்லகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நவ்லகா உடல் நிலையை காரணம் காட்டிதன்னை வீட்டு காவலில் வைக்கஅனுமதி வேண்டும் என கோரினார்.இந்த கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியது. ஆனால், அவரை வீட்டு சிறையில் வைப்பதற்கான பாதுகாப்பு செலவினத்தை நவ்லகாவே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த வழக்குநேற்று முன்தினம் உச்ச நீதிமன்றநீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது வீட்டுக் காவலில் வைக்க விரும்பி கேட்டுக் கொண்டது நீங்கள்தான் (நவ்லகா). உங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மகாராஷ்டிரா அரசுக்கு ரூ.1.64 கோடி செலுத்த வேண்டும். அந்தப் பொறுப்பில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. நவ்லகாவின் வழக்கறிஞர் பாதுகாப்பு செலவினத்துக்கான கணக்கீட்டைப் பார்த்து அதை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம். மும்பை உயர் நீதிமன்றம் நவ்லகாவுக்கு வழங்கிய ஜாமீனுக்கு இடைக்கால தடை தொடரும். ஏப்ரல் 23 -ம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் என்று நவ்லகா சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
