தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி

தம்பி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி
Updated on
1 min read

ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை நிறுவி,தற்போது தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் ‘விஸ்வம்பரா’ எனும்படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் பவன்கல்யாண், மற்றும் ஜனசேனா கட்சியின் பொது செயலாளரும், சிரஞ்சீவியின் மற்றொரு தம்பியுமான நடிகர் நாகபாபுவும் சந்தித்தனர்.

அவர்களை அன்போடு படப்பிடிப்பு தளத்திற்கு வரவேற்றார்சிரஞ்சீவி. பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்டனர். அதன் பின்னர், நடிகர் சிரஞ்சீவி ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் நன்கொடையாக வழங்கினார்.

பின்னர் சிரஞ்சீவி பேசுகையில், ‘‘பலர் ஆட்சிக்கு வந்த பிறகு தான்உதவி செய்வார்கள். ஆனால், எனது தம்பியான பவன் கல்யாண்,தனது சொந்த பணத்திலேயே விவசாய தொழிலாளர்கள் பலருக்கு உதவி புரிந்து வருகிறார். இது என்னை மிகவும் கவர்ந்தது. ஆதலால், என்னுடைய பங்காக சிறு நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கினேன்‘’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in