வருண் காந்திக்கு ‘சீட்’ மறுப்பு; வருத்தம் எதுவும் இல்லை: மேனகா காந்தி கருத்து

வருண் காந்திக்கு ‘சீட்’ மறுப்பு; வருத்தம் எதுவும் இல்லை: மேனகா காந்தி கருத்து
Updated on
1 min read

லக்னோ: முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அவர் எம்.பி.யாக உள்ள உ.பி.யில் சுல்தான்பூரில் போட்டியிட பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரது மகனும் பிலிபித் தொகுதி எம்.பி.யுமான வருண் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை. பிலிபித் தொகுதியில் அவருக்கு பதிலாக உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாதா நிறுத்தப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மேனகா காந்திகூறும்போது, “வருண் காந்திக்குமீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததில் ஆச்சரியமோ வருத்தமோ இல்லை. பாஜக, ஒரு தொண்டர் அடிப்படையிலான கட்சி, அனைவரும் எடுக்கப்பட்ட முடிவுகளை கடைபிடிக்கின்றனர்” என்றார்.

மேலும் வருண் வேறு கட்சியில் சேர்கிறாரா என்பது குறித்தும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்றார். விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளில் பிரதமர் மோடி அரசை வருண் காந்தி விமர்சித்து வந்தார். பிலிபித் வேட்பாளராக அறிவிக்கப்படாததை தொடர்ந்து தொகுதி மக்களுக்கு வருண் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், “எம்.பி.யாகஇல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் ஒரு மகனாக என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவையாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன், எனது வீட்டுக்கதவுகள் முன்பு போலவே எப்போதும் உங்களுக்கு திறந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in