தேர்தல் ஆணையத்தின் முன்பு திரிணமூல் எம்.பி.க்கள் தர்ணா

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு நேற்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சாகேத் கோகலே உள்ளிட்ட 10 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு நேற்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சாகேத் கோகலே உள்ளிட்ட 10 பேர் தர்ணாவில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்திவருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது விசாரணை அமைப்புகளை ஏவி வருவதாகவும் குற்றம் சாட்டி டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் முன்பு நேற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த 10 எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

அமைதியான வழியில் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அறிவித்திருந்தனர். எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக தேர்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த 10 எம்பிக்கள் தேர்தல் ஆணையம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக டோலா சென்பேசும்போது, என்ஐஏ, சிபிஐ,அமலாக்கத் துறை, வருமானவரித்துறை ஆகிய விசாரணை அமைப்புகளின் தலைமை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். இதனை வலியு றுத்தி 24 மணிநேர அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.

இந்தப் போராட்டத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி.யான டெரிக்ஓ பிரையன் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in