Last Updated : 04 Apr, 2018 02:53 PM

 

Published : 04 Apr 2018 02:53 PM
Last Updated : 04 Apr 2018 02:53 PM

தென்னிந்தியாவில் பருவமழை குறைவாக பெய்யும்: ‘ஸ்கைமெட்’ தகவல்

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான அளவையொட்டியே இருக்கும், எனினும் தென்னிந்தியாவில் வழக்கத்தை விடவும் பருவமழை குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது  என ‘ஸ்கைமெட்’ வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை பொழிவை தரும், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் தொடங்கி, செப்டமபர் மாதம் வரை பெய்யும். இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்காற்றுகிறது. தென் மேற்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாதகால அவகாசம் உள்ளது. இந்நிலையில் தனியார் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ‘ஸ்கைமெட்’ கணித்துள்ளது.

இதுகுறித்து ‘ஸ்கைமெட்’ கூறியுள்ளதாவது

‘‘இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான காலத்தில் தொடங்கி இயல்பான அளவு பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில் அதிக அளவு மழை இருக்கும். ஜூலையில் இயல்பான அளவிலும், ஆகஸ்ட்டில் இயல்புக்கு குறைவாகவும் இருக்கும். நீண்டகால பொது சராசரியை கணக்கிட்டால் 100 சதவீத அளவில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பஞ்சம் ஏற்பட பூஜ்ஜியம் சதவீதமே சாத்தியம் இருக்கிறது. நாடுமுழுவதும் மழையளவு சராசரியாக இருந்தாலும், குறிப்பிட்டு பார்க்கும்போது, தென்னிந்திய தீபகற்ப பகுதியிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சராசரி அளவை விடவும் குறைவாக பெய்ய வாய்ப்புள்ளது’’

இவ்வாறு ‘ஸ்கைமெட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x