“மோடி ஆட்சியில் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன” - உ.பி முதல்வர் யோகி

யோகி ஆதித்யநாத் | மோடி
யோகி ஆதித்யநாத் | மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக மாறியுள்ளன” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம், வார்தா மாவட்டத்தில் உள்ள ஹிங்கங்காட் நகரில் பாஜக வேட்பாளர் ராம்தாஸ் தடாஸுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக மாறியுள்ளன. இந்திய நாட்டின் மீதான மரியாதை உலகளவில் உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இந்தியாவை உலகளாவிய சக்தியாக மாற்ற விரும்புகிறது” என்று பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in