

அமராவதி: ஆந்திர அரசுக்கு இந்திய பல் மருத்துவ கவுன்சில் (டிசிஐ) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆந்திராவில் அதிக அளவில் பல் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதன்காரணமாக பல் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி 7,500 பேருக்கு ஒரு பல் மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், ஆந்திராவில் 2,524 பேருக்கு ஒரு பல் மருத்துவர் உள்ளார். இதனால் பல் மருத்துவர்களுக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. தற்போது ஆந்திராவில் 17 பல் மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன. எனவே புதிதாக பல் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு இந்திய பல் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.