Published : 04 Apr 2024 07:27 AM
Last Updated : 04 Apr 2024 07:27 AM

ஹெல்த் டிரிங்க், எனர்ஜி டிரிங்க் வார்த்தையை பயன்படுத்தக்கூடாது: பிளிப்கார்ட், அமேசானுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டஇ-காமர்ஸ் நிறுவனங்கள் சில பானங்களின் வகைகளுக்கு துல்லியமான லேபிளிங் வார்த்தையை பயன்படுத்த வலியுறுத்தும் உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பிறப்பித்துள்ளது.

அதன்படி, பால், தானியங்கள்அல்லது மால்ட் அடிப்படையிலான பானங்களுக்கு ஆரோக்கிய பானங்கள் (ஹெல்த் டிரிங்க்) அல்லது ஆற்றல் பானங்கள் (எனர்ஜி டிரிங்க்) என்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

நாட்டின் உணவு சட்டங்களுக்குள் ஆரோக்கிய பானம் என்ற வார்த்தைக்கான தெளிவான வரையறை இல்லாததன் காரணமாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அதேபோன்று, “எனர்ஜி டிரிங்க் என்பது ஏற்கெனவே உள்ள விதிமுறைகளின்படி கார்பனேற்றம் மற்றும் கார்பனேற்றம் செய்யப் படாத நீர் சார்ந்த சுவை கொண்டபானங்களுக்கென ஒதுக்கப்பட் டுள்ளது.

எனவே, தவறான வார்த்தைகள் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் என்பதை உணர்ந்து எஃப்எஸ்எஸ்ஏஐ இந்த உத்தரவை இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு பிறப்பித்துள்ளது.

2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், உணவுத் தொழிலை நிர்வகிக்கும் தொடர் புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்குள் ஹெல்த்டிரிங்க் என்ற சொல் தரநிலைப் படுத்தப்படவில்லை. மறுபுறம் எனர்ஜி டிரிங்க் குறிப்பிட்ட அளவுகோல்களுக்குள் வரும் தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் ஆற்றல் பானங்களின் நுகர்வு குறிப்பாக இளைஞர்களிடையே இதுபோன்ற பானங்களின் அதிகப்படியான நுகர்வு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. அதன் காரணமாகவே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த உணவு பாதுகாப்பு அமைப்பு தற்போது தடைவிதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x