ஜம்மு - காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி - 10 பேர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டாக்ஸி - 10 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் டாக்ஸி ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காஷ்மீரின் ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் அருகே பேட்டரி சாஸ்மா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு டாக்ஸி ஒன்று சென்று கொண்டிருந்தது. நள்ளிரவு 1 மணி அளவில் மழை பெய்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டாக்ஸியில் பயணம் செய்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த 10 பேரின் உடல்களையும் கனமழைக்கு நடுவே மீட்டனர். இந்த விபத்துக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் இதே ராம்பன் பகுதியில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in