50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு: கார்கேவிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை

50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு: கார்கேவிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
Updated on
1 min read

முஸ்லிம் ஐக்கிய முன்னணி (எம்யுஎப்) மற்றும் ஆந்திராவின் குண்டூரிலுள்ள முஸ்லிம் ஜேஏசி-யின் தலைவர் முகம்மது கலீம், காங்கிரஸ் தேசியத் தலைவரும் 'இண்டியா' கூட்டணியின் அமைப்பாளருமான மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் பங்கு சுமார் 14 சதவீதமாக உள்ளது. ஆனால், மக்களவையில் தற்போது 27 முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்.

இதை உயர்த்தும் வகையில், வரும் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி சார்பில் குறைந்தபட்சம் 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

இதை நீங்கள் அனைத்து கட்சிகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டியது அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in