

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதி சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா தனது ஆதரவாளர்களுடன் நாக்பூரில் உள்ள சந்திரசேகர் பவன்குலே இல்லத்தில் பாஜகவில் இணைந்தார். அமராவதி தொகுதியில் பாஜக வேட்பாளராக அவரது பெயரை பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டி புதன்கிழமை இரவு அறிவித்தது.
இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில் ஹனுமன் சாலிசா கோஷன் எழுப்பி போராட்டம் செய்ததற்காக நவ்நீத் ராணா மீது வழக்கு தொடுத்து அவரை சிறையிலடைத்த முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை வன்மையாக கண்டிக்கிறேன். நவ்நீத் ராணாவுக்கு ஏப்ரல் 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறோம். இவ்வாறு கூறினார்.