பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு பெண் குழந்தை - குவியும் வாழ்த்து

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கு பெண் குழந்தை - குவியும் வாழ்த்து
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரீத் கவுருக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து இருவருக்கும் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று குழந்தை பிறந்தது. இதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட முதல்வர் பகவந்த் சிங் மான், “கடவுள் ஒரு மகளை பரிசாகக் கொடுத்துள்ளார். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்” என்று கூறி குழந்தையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

பகவந்த் சிங் மானின் மூன்றாவது குழந்தையாகும். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முதல் மனைவி இந்தர்ப்ரீத் கவுரை பிரிந்தார். 2015இல் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், இரண்டாவதாக டாக்டர் குர்பிரீத் கவுரை ஜூலை 2022ல் மணந்தார்.

அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் மார்ச் 16, 2022 அன்று பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் பதவியேற்று கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in