பாஜக 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இமாச்சலில் நடிகை கங்கனா போட்டி

பாஜக 5-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இமாச்சலில் நடிகை கங்கனா போட்டி
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5வது பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இதில பாலிவுட் நடிகை கங்கனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பாஜக சார்பில் மக்களவை தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை இதுவரை நான்கு பட்டியல்களாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மார்ச் 24) ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இதில் ஆந்திரா, பிஹார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கான 111 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இது குறித்து கங்கனா தனது எக்ஸ் பதிவில், “என் அன்புக்குரிய பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. இன்று பாஜகவின் தேசியத் தலைமை எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும் நம்பகமான மக்கள் சேவகியாகவும் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கங்கனா கூறியுள்ளார்.

மேலும், மீரட் தொகுதியில் மகாபாரதம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் பாஜக சார்பில் களமிறங்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in