தேர்தல் உடன்பாடு? - மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியுடன் ராஜ் தாக்கரே பேச்சுவார்த்தை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு.
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த செவ்வாயன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற பாஜக கூட்டணியுடன் ராஜ் தாக்கரே இணைந்து பணியாற்றுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, எம்என்எஸ் மூத்த தலைவர் பாலா நந்தகோன்கர், இரு தலைவர்களுக்கிடையிலான மக்களவைத் தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை சாதகமாக இருந்ததாகவும், அதுகுறித்த விவரங்கள் ஓரிரு நாட்களில் பகிரப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரை எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சந்தித்துப் பேசினார்.

புறநகர் பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்டில் இந்த கூட்டம் நடைபெற்றது. ராஜ் தாக்கரே சிவசேனா பிளவுபடாமல் இருந்தபோது அதிலிருந்து பிரிந்து 2006-ல் எம்என்எஸ் கட்சி நிறுவினார். பாஜகவுடன் கூட்டணி உறுதியானால், மும்பையில் போட்டியிட எம்என்எஸ் கட்சிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in