காஷ்மீரில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது: பிரதமர் மோடிக்கு விமர்சகர் பாராட்டு

ஷெஹ்லா ரஷீத் ஷோரா மற்றும் பிரதமர் மோடி
ஷெஹ்லா ரஷீத் ஷோரா மற்றும் பிரதமர் மோடி
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நகரை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெஹ்லா ரஷீத் ஷோரா. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவரான இவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்தவர் தற்போது பிரதமரை பாராட்டுகிறார்.

இதுகுறித்து ‘எழுச்சி பெறும் பாரதம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறும்போது, “நான் மாறவில்லை. ஆனால் காஷ்மீரில் நிலைமை மாறியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கள நிலவரத்தில் சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் மக்கள் எப்படி அணிவகுத்து நின்றனர் என்பதை பார்த்தோம். ஆட்சியை புகழ்ந்து பேசுவது எனது நோக்கமல்ல. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து பிரதமரின் பெயரை உச்சரிப்பதாக நான் கூறவில்லை. ஆனால் மக்கள் இப்போது அரசிடம் புகார்களை எழுப்புகின்றனர். அதனை தங்கள் அரசாக கருதுகின்றனர்” என்றார்.

களத்தில் எழுப்பப்படும் பிரச்சினைகளில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“காஷ்மீரில் மின்வெட்டு போன்ற இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன் விடுதலைக் கால கோரிக்கை மட்டுமே மிக முக்கியப் பிரச்சினையாக இருந்தது. ஆனால் இப்போது சாலைகள், மின்சாரம் போன்றவைதான் பிரச்சினையாக எழுப்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in