தெலங்கானா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

தெலங்கானா ஆளுநராக சி.பி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

Published on

ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த தமிழிசை சவுந்தர்ராஜன், ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா மாநில ஆளுநர், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று ஆளுநர் மாளிகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in