ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர், கூட்டாளி அசாமில் கைது

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்
Updated on
1 min read

துப்ரி: அசாம் மாநிலத்தின் துப்ரி மாவட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநில காவல் துறையின் சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த இருவர் சர்வதேச நாடுகளின் எல்லையை கடந்து அசாமில் ஊடுருவி உள்ளதாக அந்த மாநில காவல் துறைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து சிறப்பு படைப் பிரிவு அதிகாரிகள் துப்ரியில் தேடுதல் பணியை மேற்கொண்டனர். அதன் மூலம் புதன்கிழமை அன்று ஹரிஸ் ஃபருக்கி என்கிற ஹரிஸ் அஜ்மல் ஃபருக்கி மற்றும் அனுராக் சிங் என்கிற ரெஹானை கைது செய்தனர்.

இதில் ஃபருக்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் என தெரியவந்துள்ளது. இவர் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் குற்றவாளி. இந்தியாவில் தீவிரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டுவது, அதற்கான ஆட்களை பணியமர்த்துவது போன்ற பணிகளை கவனித்து வந்துள்ளார். அனுராக் சிங் என்கிற ரெஹான் வங்கதேச பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறை அதிகாரிகள், அவர்களை தேசிய புலனாய்வு முகமை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in