சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: அவதூறு பரப்பிய மென்பொறியாளர் கைது

சச்சின் மகள் பெயரில் போலி ட்விட்டர் ஐடி: அவதூறு பரப்பிய மென்பொறியாளர் கைது
Updated on
1 min read

கிரிக்கெட் வீரரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் பெயரில் போலி ட்விட்டர் முகவரி ஆரம்பித்து அதில் ட்வீட் செய்துவந்த மென்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் பெயரில் போலி ட்விட்டர் ஹேண்டில் தொடங்கப்பட்டது. இந்த ட்விட்டர் ஐடியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டுவந்தன.

இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த மென்பொருள் இன்ஜினியர் நிதின் ஷிசோடே கைது செய்யப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in