Published : 18 Mar 2024 06:50 AM
Last Updated : 18 Mar 2024 06:50 AM

தலைப்பு செய்திக்காக பணியாற்றுவதில்லை: பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா டுடே இதழ் நடத்திய கருத்தரங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசியதாவது:

இது போன்ற கருத்தரங்கு நிகழ்ச்சிகளில் நான் பங்குபெறும்போது, தலைப்பு செய்திகளில் இடம் பெறும் விஷயங்களை நான் பேச வேண்டும் என இங்குள்ளவர்கள் எதிர்பார்ப்பர். ஆனால், நான் திட்டங்களின் கெடு தேதி (டெட்லைன்) நோக்கி பணியாற்றும் நபர். தலைப்பு செய்தியில் இடம்பெற பணியாற்றும் நபர் அல்ல. ஆகையால், நான் கூறும் சில விஷயங்கள், ஊடகத்தினருக்கு ஈர்ப்பு இல்லாததாக இருக்கலாம்.

மத்திய அரசின் நலத்திட்டங்களை எல்லாம் விரிவுபடுத்த நான் விரும்புகிறேன். ஆனால், இது குறித்த செய்திகள் ஊடகங்களில் அரிதாக வெளியாகின்றன. ஆனால் இந்த திட்டங்கள் சாதாரண மக்களுடன் தொடர்புடையவை.

நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் தற்போது 1.25 லட்சம் பதிவு செய்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் ஒருசில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

ஸ்டார்ப் அப் நிறுவனங்கள் பற்றி பேசுவது பயன் இல்லை என்று நினைத்த அரசியல் கட்சி, தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x