

மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்கள்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைமுறைகள் :
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள்: மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற உள்ளன. அதற்கான தேதி விவரங்கள்:
தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்ட தகவல்கள்: 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மேலும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பதவிக்காலமும் நிறைவடைவதால் அவற்றிற்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.