Published : 16 Mar 2024 06:45 AM
Last Updated : 16 Mar 2024 06:45 AM
புதுடெல்லி: இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர்ஷெரிங் டோப்கே, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார். அவரது அழைப்பை ஏற்று, மோடி அடுத்த வாரம் பூடான் செல்கிறார்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கேல் வாங்சக் கடந்தாண்டு நவம்பரில் இந்தியா வந்தார். அப்போது, அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பூடான் வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் பூடான் பிரதமராக ஷெரிங் டோப்கே கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். அவர் தனது முதல் அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவைபூடான் பிரதமர் ஷெரிங்டோப்கே சந்தித்து பேசினார்.
பின்னர் பிரதமர் மோடியைஅவர் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். உள்கட்டமைப்பு வளர்ச்சி, போக்குவரத்து, எரிசக்தி, நீர்மின்சக்தி, கூட்டுறவு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
தனிச்சிறப்பான நட்பு: இந்தியா-பூடான் இடையே நிலவும் தனிச்சிறப்பான நட்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர். பூடானின் வளர்ச்சியில் இந்தியா நம்பிக்கைக்குரிய பங்கு தாரராக இருப்பதை பூடான் பிரத மர் ஷெரிங் டோப்கே வெகுவாக பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT