Published : 19 Feb 2018 04:15 PM
Last Updated : 19 Feb 2018 04:15 PM

குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவு: பாஜகவுக்கு மீண்டும் சவாலாகும் காங்கிரஸ்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக முன்னிலை பெற்று வருகிறது. எனினும் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்பைவிடவும் அதிக இடங்களில் வெற்றி பெறும் சூழலில் உள்ளது.

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோதிலும், முந்தைய தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் வலிமையான எதிர்கட்சியாக உள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை அன்று தேர்தல் நடந்தது. 74 நகராட்சிகள், இரண்டு மாவட்ட பஞ்சாயத்துகள், 17 தாலுகா பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், ஆளும் பாஜக 44 நகராட்சிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் 27 நகராட்சிகளில் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக 59 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது ஆளும் பாஜகவை விடவும், காங்கிரஸ் கூடுதலான இடங்களில் வெற்றி பெறும் சூழல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x