மக்கள் வெல்ல ஜெகன் தோற்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்

மக்கள் வெல்ல ஜெகன் தோற்க வேண்டும்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
Updated on
1 min read

அமராவதியில் உள்ள தனது இல்லத்தில் தெலுங்கு தேசம் கட்சிதலைவர் சந்திரபாபு நாயுடு ‘கனவுகளுக்கு சிறகுகள்’ எனும் திட்டம் குறித்து பேசியதாவது: தெலுங்குதேசம் கட்சி ஆட்சி அமைந்ததும், ‘மஹா சக்தி’ எனும் திட்டம்கொண்டு வரப்படும்.

இத்திட்டம் பெண்களுக்கு உரியதானதாகும். இதில் பெண்களுக்கு ஆண்டு தோறும் ‘தாய்க்கு வந்தனம்’ எனும் பெயரில் ரூ. 15,000 நிதி உதவி வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

மாணவிகளின் மேற்படிப்பு பயில வங்கி கடன்வசதியை அரசே செய்து கொடுக்கும். அதற்கான வட்டியை அரசே செலுத்தும். மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், கண்டிப்பாக ஜெகன் தோல்வி அடைந்தே தீர வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in