Published : 15 Mar 2024 06:15 AM
Last Updated : 15 Mar 2024 06:15 AM
திருப்பதி: திருப்பதி அருகே நேற்று லேசான நிலநடுக்கம் பதிவானது. ரிக்டர் அலகில் 3.9-ஆக பதிவானதால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா தெரிவித்தார்.
திருப்பதி மாவட்டம் நாயுடுபேட்டா மண்டலத்துக்கு உட்பட்ட பிச்சிரெட்டி தோப்பு, மங்கபதி நகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு சுமார் 8.43 மணிக்கு திடீரென லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இதை உணர்ந்த அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்து, வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
சுமார் 5 விநாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அலகில் 3.9-ஆக பதிவாகி உள்ளது. மிக லேசான இந்த நிலநடுக்கதால் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று திருப்பதி மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் எந்த அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்படி வேறு எங்காவது நில நடுக்கம் ஏற்பட்டாலோ அல்லது பொதுமக்கள் தங்களது வீடுகளில் தங்க பயப்பட்டாலோ 0877-2236007 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT