மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி

மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மம்தாவின் நெற்றியில் ரத்தம் வழியும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

நெற்றியின் நடுவில் ஆழமான வெட்டு காயத்துடன் முகத்தில் ரத்தம் வழியும் நிலையில் மருத்துவமனை படுக்கையில் மம்தா சிகிச்சை பெறும் புகைப்படங்களை திரிணமூல் காங்கிரஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

தனது வீட்டில் இருக்கும் போது மம்தா கீழே விழுந்துவிட்டார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில், "எங்கள் தலைவர் மம்தா பானர்ஜிக்கு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவருக்காக உங்கள் பிரார்த்தனைகள் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in