Last Updated : 02 Feb, 2018 02:19 PM

 

Published : 02 Feb 2018 02:19 PM
Last Updated : 02 Feb 2018 02:19 PM

இது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல: அனந்த்குமார் மறுப்பு

மக்களவை தேர்தலை மனதில் வைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார், இது அனைவருக்குமான பட்ஜெட் எனக் கூறினார்.

இது குறித்து 'தி இந்து'விடம் பட்ஜெட் மீதான கருத்து கூறிய அனந்த்குமார், "இது ஒரு மாற்றத்திற்கான பட்ஜெட் ஆகும். விவசாயிகள், ஏழை, பாமர மக்கள், இளைஞர்கள் என அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

முதன்முறையாக இந்த பட்ஜெட்டில் நடுத்தர, சிறு, சிறு தொழில்களை ஒன்றரை மடங்கு அதிகரிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நலம் மீதான காப்பீடு உட்பட பல திட்டங்களால் ரூபாய் ஐம்பதாயிரம் கோடிக்கான லாபம் ஏழைகளுக்கு நேரடியாகக் கிடைக்க உள்ளது. சர்வதேச அளவில் இந்தவகையான உடல்நலக் காப்பீடு எந்த நாட்டிலும் இல்லை.

குறிப்பாக வேலைவாய்ப்பு எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் உள்கட்டமைப்புகளுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூ நகருக்காக கடந்த 21 வருடங்களாக நிலவிய உள்ளூர் ரயில் வசதிக்கான கனவு இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 17,000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டிருப்பது பெங்களூரூவின் ஒரு கோடி மக்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பாகும்.

2022-ம் ஆண்டுவரை நாட்டின் விவசாயிகளின் விளைபொருட்கள் இரட்டிப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

இது இரட்டிப்பிப்பானால் அவர்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்கும். இது இந்த பட்ஜெட் மூலம் அமலுக்குவரும். இது தேர்தலுக்கான பட்ஜெட் அல்ல. பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்குமான பட்ஜெட் ஆகும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x