Published : 13 Mar 2024 08:06 AM
Last Updated : 13 Mar 2024 08:06 AM
புதுடெல்லி: ராணுவ தளவாட இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதல் இடம்வகித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக உள்ளது. இந்தப் பட்டியலில் 2-ம் இடத்தில் சவூதி அரேபியா (8.4%), கத்தார்(7.6%), உக்ரைன் (4.9%), பாகிஸ்தான் (4.3%), ஜப்பான் (4.1%),எகிப்து (4%), ஆஸ்திரேலியா(3.7%), தென்கொரியா (3.1%), சீனா (2.9%) உள்ளன.
அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 36% இறக்குமதி செய்கிறது. பிரான்ஸிடமிருந்து 33%,அமெரிக்காவிடமிருந்து 13% இந்தியா இறக்குமதி செய்கிறது. 2018-22 ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி உலக மொத்த ஆயுத விற்பனையில் 11 சதவீதமாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT