ஊழல், வாரிசு அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி: முக்தார் அப்பாஸ் நக்வி புகழாரம்

ஊழல், வாரிசு அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி: முக்தார் அப்பாஸ் நக்வி புகழாரம்
Updated on
1 min read

கிருஷ்ணா நகர்: ஊழல் மற்றும் வாரிசு அரசியலை ஒழித்தவர் பிரதமர் மோடி என பாஜக மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது: பரம்பரை ஆட்சியால் நாட்டின் வளர்ச்சி முடங்கி விட்டது. ஊழல்மற்றும் வாரிசு அரசியலை ஒழித்து,நல்லாட்சி மற்றும் அதிகாரம்அளித்தல் மூலம் செயல்படுவதிலும், சீர்திருத்தம் கொண்டு வருவதிலும் உலகளாவிய அடையாளமாக பிரதமர் நரேந்திர மோடி உருவாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி கிரா மத்தில் நடந்த அராஜகங்கள், மம்தா பானர்ஜி ஆட்சி மக்களுக்கு எதிரானது என்பதை நிருபிக்கும். இது போன்ற அராஜகங்களுக்கு காரணமானவர்களுக்கு மக்கள் ஓட்டு இயந்திரம் மூலம் பாடம் புகட்ட வேண்டும்.

பாஜக அரசின் வளர்ச்சி திட்டங்களால், மற்றவர்களைப் போல்சமஅளவில் பயனடைந்துள்ளோம் என்பதை சிறுபான்மையினர் உணர்ந்துள்ளனர். இதனால் அவர்கள் பாஜகவை நேசிக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in