Published : 11 Mar 2024 07:08 AM
Last Updated : 11 Mar 2024 07:08 AM
புதுடெல்லி: மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ், மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்துடன் இணைந்து கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக்கும் வகையில் இ ஸ்மார்ட் கிளினிக் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தை ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
இ ஸ்மார்ட் கிளினிக் திட்டம் தொடர்பாக லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் அபியான் இடையே கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்தத் திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நாடு முழுவதும் அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ ஸ்மார்ட் கிளினிக் மூலம், கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவாலாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, கிராமப்புறங்களில் இரத்தப் பரிசோதனை உட்பட அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகள் உடனடியாக மேற்கொள்ளவும் அது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெறவும் வழிசெய்யப்படும்.
இதுகுறித்து லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனவ் தெலிபேசுகையில், “இந்திய கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக கொண்டு சேர்க்கும் நோக்கில்நவீன தொழில்நுட்ப உதவியுடன்இந்தத் திட்டத்ததைத் தொடங்குகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமிக்க மருத்துவ சேவையை நோக்கிய நகர்வில் முக்கிய தருணம் இது” என்று குறிப்பிட்டார். அனைத்து கிராமங்களுக்கும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT